Cyber-SED delivered 1st Mega Webinar on ”Organic Fertilizer Manufacturing”
“பசுமையான நாடு விஷம் இல்லாத நாளை” என்ற கருப்பொருளின் கீழ் சௌபாக்கியத்தின் நோக்கு என்பது மக்களை மையமாகக் கொண்ட பொறிமுறையுள் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையில் விவசாயத்தில் முழுமையாக சேதனப் பசளைகளைப் பயன்படுத்த சேதனப் பசளை உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஏற்ப சேதனப் பசளைகளை உற்பத்தி செய்வதற்கு இளம் தொழில் முயற்சியாளர்களை வழிநடத்தும் நோக்கத்துடன் இளைஞர் மற்றும்; விளையாட்டுத்துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இணையவழி (Online) விழிப்புணர்வுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இலங்கையில் அரச நிறுவனம் ஒன்றில் முதன்முறையாக நாடு முழுவதிலும் இருந்து 1900 இளைஞர்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிடல் தொழிநுட்ப மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
இளம் தொழில் முயற்சியாளர்கள் சமூகத்தில் பிரபலமான, Cyber SED வலைத்தளம் ஊடாக நடாத்தப்பட்ட முதலாவது இணையவழி அறிவூட்டல் கருத்தரங்கை வெற்றிகரமாக நடாத்த, விவசாய சேவைகள் திணைக்களம், மாகந்துர விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்தியநிலையம், தேசிய உரச் செயலாளர் காரியாலயம், சமுர்த்தித் திணைக்களம், இலங்கை வங்கி மற்றும்; மக்கள் வங்கி ஆகிய நிறுவனங்கள் தமது வளங்களை வழங்கினார்கள்.
சேதனப் பசளைச் சந்தையினுள் தற்போது உள்ள வாய்ப்புகள், சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கான அடிப்படைத் தேவைகள், தொழிநுட்ப உதவிகள் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பதுடன், தர உத்தரவாதம் பெறுதல், சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில் அரச நிதி நிறுவனங்கள் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்;டுள்ள கடன் யோசனை முறைகள் என்பவை பற்றி பங்குபற்றியோருக்கு விளக்கமளிக்கப்பட்டது
வேலைத்திட்டத்தின் முடிவில், எல்லா நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் சேதனப் பசளை உற்பத்தி தொடர்பாக இளம் முயற்சியாளர்களுக்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் அனுசரணை மற்றும் வழிகாட்டலுடன் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அது தொடர்பில் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறைகள் தொடர்பாக அறிவூட்டல் செய்ய முடிந்தது.